Friday, August 20, 2010

ஈபெல் கோபுரம்

ஈபெல் கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(ஈபிள் கோபுரம் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இணைப்புத் தலைப்பு

ஈபெல் கோபுரம்

ஈபெல் கோபுரம் (பிரெஞ்சு: Tour Eiffel, /tuʀ ɛfɛl/) பாரிஸில் மிகக் கூடுதலாக அடையாளம் காணத்தக்க குறிப்பிடமாகும். அத்துடன், உலகம் முழுவதிலும், இது பாரிஸிற்கான ஒரு குறியீடாகவும் அறியப்படுகிறது. இதை வடிவமைத்த குஸ்ட்டேவ் ஈபெல்ல்லின் பெயரினால் அழைக்கப்படும் இக் கோபுரம், முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஆண்டுதோறும் 55 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இதைப் பார்க்க வருகிறார்கள். இக் கோபுரம் தனது 20 கோடியாவது பார்வையாளரை 2002, நவம்பர் 28 ஆம் திகதி பெற்றது.

பொருளடக்கம்

[மறை]

அறிமுகம்

1987 தொடக்கம் 1989 வரையான காலப்பகுதியில், இவ்வமைப்பு, பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, எக்ஸ்பொசிசன் யூனிவேசெல் (1889) என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு, நுழைவாயில் வளைவாகக் கட்டப்பட்டது. 1889, மார்ச் 31 ஆம் திகதி தொடக்கவிழா நடைபெற்று, மே 6 இல் திறந்துவிடப்பட்டது. 300 உருக்கு வேலையாட்கள், 5 இலட்சம் ஆணிகளைப் பயன்படுத்தி, 18,038 உருக்குத் துண்டுகளை ஒன்றுடனொன்று பொருத்தினார்கள். அக்காலத்திய பாதுகாப்புத் தரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இதன் கட்டுமானக் காலத்தில், உயர்த்திகளைப் பொருத்தும்போது, ஒரேயொரு தொழிலாளி மட்டுமே இறக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இக் கோபுரம், அதன் உச்சியிலுள்ள, 20மீட்டர் உயரமுள்ள, தொலைக்காட்சி அண்டெனாவைச் சேர்க்காது, 300 மீட்டர்கள் (986 அடிகள்) உயரமானதும், 10,000 தொன்களிலும் (2 கோடியே 10 இலட்சம் இறாத்தல்) கூடிய நிறையை உடையதுமாகும். இது கட்டிமுடிக்கப்பட்டபோது, உலகின் அதிக உயரமான அமைப்பு இதுவேயாகும். இதன் பராமரிப்புக்காக, ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை 50 தொன்கள் கடும் மண்ணிறப் பூச்சு மை பயன்படுத்தப்படுகிறது. வெப்பநிலைமாறும் போது, உருக்கு சுருங்கி விரிவதன் காரணமாக, ஈபெல் கோபுரத்தின் உயரத்தில் பல சதம மீட்டர்கள் வேற்பாடு ஏற்படுகின்றது.

இது கட்டப்பட்ட காலத்தில், எதிர்பார்க்கக் கூடியவகையில், பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு இருந்தது. பலர் இது பார்வைக்கு அழகாக இராதென்றே கருதினார்கள். இன்று இது உலகிலுள்ள மிகக் கவர்ச்சிகரமான கட்டிடக்கலைகளுள் ஒன்று என்று கருதப்படுகிறது.

ஆரம்பத்தில், இக் கோபுரத்தை 20 ஆண்டுகள் அவ்விடத்தில் நிறுத்திவைப்பதற்கு ஈபெல் அநுமதி பெற்றிருந்தார், எனினும், தொடர்புகளுக்கு இது மிகவும் பெறுமதி மிக்கதாக இது இருந்ததனால், அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னும், கோபுரம் அங்கே நிற்க அனுமதிக்கப்பட்டது. [1]

நிகழ்ச்சிகள்

ஜனவரி 12, 1908 ல், முதலாவது தொலைதூரத் தகவல் வானொலி கோபுரத்திலிருந்து அனுப்பப்பட்டது.

1929 ல், கிறிஸ்லெர் கட்டிடம் நியூ யோர்க்கில் கட்டி முடிக்கப்பட்டபோது, ஈபெல் கோபுரம், உலகின் அதி உயர்ந்த அமைப்பு என்ற பெயரை இழந்தது.

அடொல்ப் ஹிட்லர், [[இரண்டாவது உலக யுத்தத்தின்போது, பாரிஸுக்கு விஜயம் செய்தபோது, அவர் 1792 படிகளையும், ஏறியே உச்சிக்குச் செல்லட்டும் என்பதற்காக, பிரெஞ்சுக்காரர் அதன் உயர்த்திகளைச் செயலிழக்கச் செய்தனர். அதனைப் பழுதுபார்க்கத் தேவைப்படும் உதிரிப்பாகத்தைப் பெற்றுக்கொள்வது, யுத்தச் சூழலில் முடியாது என்று கருதப்பட்டதெனினும், நாஸிகள் புறப்பட்டுச் சென்ற சில மணி நேரத்திலேயே அது செயல்படத் தொடங்கிவிட்டது. ஹிட்லர் கீழேயே நின்றுவிட்டுச் சென்றுவிட்டார்.

ஜனவரி 3, 1956 ல் தீயொன்றினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.

1959ல் தற்போதுள்ள வானொலி அலைவாங்கி அதன் உச்சியில் பொருத்தப்பட்டது.

பிரதிபண்ணல்களும், போலிகளும்

ஈபெல் கோபுரத்தின் பிரதிகளை உலகம் முழுவதும் காணலாம் அவற்றுல் முக்கியமானவை சில:

  • டோக்கியோ, யப்பான் டோக்க்யோ கோபுரம் என அழைக்கப்படு இது ஈபெல் கோபுரத்தைவிட 13 மீட்டர் உயரமானதாகும்.(அளவு விகிதம் 1.04:1

கொலோசியம்


கொலோசியம், ரோம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(கொலோசியம் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொலொசியம் ரோம், இத்தாலி

கொலோசியம் என்பது, தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். பண்டைய ரோமப் பேரரசின் தலைநகரான ரோம் நகரில் உள்ள இது ஒரு நீள்வட்ட வடிவமான கட்டிடம் ஆகும். இதற்குக் கூரை கிடையாது. இக் கட்டிடத்தின் மத்தியில் உள்ள களத்திலேயே நிகழ்ச்சி நடக்கும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழ்வதுண்டு. இதனைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் இருப்பதற்காக நடுவில் உள்ள களத்தைச் சுற்றி வட்டம் வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும். இக் கட்டிடவகை அம்ஃபிதியேட்டர் (amphitheatre) எனப்பட்டது. இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட இச் சொல் வட்டவடிவ அரங்கம் என்ற பொருள் கொண்டது. இதே நோக்கத்துக்காக இது போன்ற பல அரங்கங்கள் ரோமர்களால் கட்டப்பட்டன. எனினும், இவை எல்லாவற்றிலும் பெரியது, பிளேவியன் அம்ஃபிதியேட்டர் என அழைக்கப்பட்ட கொலோசியம் ஆகும். அக்காலத்தில் இந்த அரங்கம், 50,000 மக்கள் இருந்து பார்க்கக்கூடிய அளவு இடவசதியைக் கொண்டிருந்ததாகக் கணக்கிட்டுள்ளார்கள்.

பொருளடக்கம்

[மறை]

வரலாறு

கட்டுமானம்

கொலோசியத்தின் உட்புறத் தோற்றம் ஒன்று. நிலம் தற்கால மீள்கட்டுமானம் ஆகும். இதன் கீழ் அக்காலத்தில் விலங்குகளையும், அடிமைகளையும் அடைத்து வைக்கும் சிறிய அறைகள் இருந்தன.

கி.பி 72 ஆம் ஆண்டில், வெஸ்பாசியன் (Vespasian) என்பவன் ரோமப் பேரரசனாக இருந்தபொழுது, இதன் கட்டிடவேலைகள் தொடங்கின. எனினும், கி.பி 80 ஆம் ஆண்டில் அவன் மகனான டைட்டஸ் காலத்திலேயே கட்டிடம் நிறைவு பெற்றது. இது நீரோ மன்னனின் மாளிகைக்கு அருகில், நீரோவின் ஏரி இருந்த இடத்தில் அமைந்துள்ளது. கொலோசியத்தின் திறப்புவிழாவுக்கான நூறு நாள் நடைபெற்ற கொண்டாட்டங்களின் போது 9,000 காட்டு விலங்குகள் கொல்லப்பட்டதாக பண்டைய ரோமானிய வரலாற்றாளரான டியோ கசியஸ் (Dio Cassius) என்பவர் கூறியுள்ளார்.

ரோமர் வரலாற்றின் பிற்காலம்

217 ஆம் ஆண்டு மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட தீயில் சேதமாகும் வரை, கொலோசியம் தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்தது. 238 ல் மீண்டுமமைக்கப்பட்ட இது, கிறிஸ்தவம், படிப்படியாக மனித உயிர்கள் பலியாகும் வீரவிளையாட்டுக்களுக்கு முடிவுகட்டும் வரை பயன்பட்டு வந்தது. காட்டு விலங்குகளை வேட்டையாடும் விளையாட்டுகளுக்காகவும், வேறு நிகழ்ச்சிகளுக்காகவும், கொலோசியம் 524 ஆம் ஆண்டுவரை பயன்பட்டது. 442 இலும், 508 இலும் ஏற்பட்ட புவியதிர்வுகளினால் இக்கட்டிடம் பலத்த சேதத்துக்கு உள்ளானது.

மத்தியகாலமும், மறுமலர்ச்சிக் காலமும்

847, 1349 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் ஏற்பட்ட புவியதிர்வுகளால் கடுமையாகச் சேதமடைந்த இது, பின்னர் ஒரு கோட்டையாக மாற்றப்பட்டது. இதன் ஒரு பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

இதன் முகப்பை மூடியிருந்த சலவைக் கற்கள், வேறு கட்டிடவேலைகளில் பயன்படுத்தப்பட்டதுடன், இவற்றை எரித்துச் சுண்ணாம்பும் தயாரித்தார்கள். மறுமலர்ச்சிக்காலத்தில், சிறப்பாக 16 ஆம், 17 ஆம் நூற்றாண்டுகளில், ரோம ஆளும் குடும்பங்கள், சென் பீட்டர் பசிலிக்கா (St. Peter's Basilica) மற்றும் தனியார் மாளிகைகளைக் கட்டுவதற்காக இந்தக் கட்டிடத்திலிருந்து சலவைக் கற்களை எடுத்துவந்தனர்.

கொலொசியம் ரோம், இத்தாலி

ஏழு உலக அதிசயங்கள்


புதிய ஏழு உலக அதிசயங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புதிய ஏழு அதிசயங்களாக வெற்றி பெற்ற இருப்பிடங்கள்.

உலகின் புதிய ஏழு அதிசயங்கள் என்பது உலகின் பழைய ஏழு அதிசயங்களின் யோசனையை புதிய அதிசயங்களின் ஒரு பட்டியலைக் கொண்டு புதுப்பிப்பதாகும். நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை என்னும் தனியார் நிறுவனம் பிரபலமுற்றவைக்கான கருத்துக்கணிப்பு ஒன்றினை ஏற்பாடு செய்தது, வெற்றி பெற்றவை ஜூலை 7 2007 அன்று போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் அறிவிக்கப்பட்டன[1]

100 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் தங்கள் வாக்குகளை இணையம் வழியாக அல்லது தொலைபேசி வழியாக பதிவு செய்ததாக சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தெரிவிக்கிறது. ஒருவரே பலவாக்குகளை பதிவு செய்வதை தடுக்க வழியில்லாததால், இந்த கருத்துக்கணிப்பு "தீர்மானமாக அறிவியல்பூர்வமற்ற" ஒன்றாகக் கருதப்படுகிறது[2]. வாஷிங்டனை மையமாகக் கொண்டு செயல்படும் கருத்துக்கணிப்பு நிறுவனமான ஜோக்பி இன்டர்னேஷனல் நிறுவனரும் தற்போதைய தலைவர்/தலைமை செயல் அதிகாரியுமான ஜான் ஜோக்பியின் கூற்றுப்படி, நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை "இதுவரை பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிகப் பெரிய கருத்துக்கணிப்பை" நடத்தியிருக்கிறது[1].

இந்த திட்டம் பரவலான வீச்சில் அதிகாரப்பூர்வ எதிர்வினைகளைப் பெற்றது. சில நாடுகள் தங்களின் இறுதித்தேர்வுக்கு கூடுதலான வாக்குகள் சேகரிக்க பிரயத்தனப்பட்டனர், மற்றவர்கள் இந்த போட்டியை அலட்சியம் செய்தனர் அல்லது விமர்சித்தனர்[2][1]. பரப்புரையின் தொடக்கத்தில் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளைக்கு ஆதரவளித்து அதிசயங்கள் தேர்வு செய்வதில் ஆலோசனைகளை எல்லாம் வழங்கிய ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ 2007 இல் இந்த தாபனத்தில் இருந்து தள்ளி நின்று கொண்டது[3][4]. கூடுதலான நினைவுச்சின்னங்கள் அவற்றுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இணையத்தளங்கள் மூலம் அல்லது தேசிய இணையத்தளங்களிலான வலிமையான ஆதரவு விளம்பரங்கள் மூலம் ஆதரிக்கப்படுகின்றன. பல நாடுகளில் தேசிய தலைவர்களும் பிரபலங்களும் நியூ7ஒன்டர்ஸ் பரப்புரைக்கு ஊக்கமளித்தனர்[5]. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் பதிவு செய்த வாக்காளர்களின் புவியியல் ரீதியான மற்றும் கலாச்சார ரீதியான பன்முகத்தன்மையைக் கொண்டு பார்த்தால், உலகளாவிய பேச்சுவார்த்தை மற்றும் கலாச்சார பரிவர்த்தனை என்னும் தனது நோக்கம் சாதிக்கப்பட்டிருப்பதைக் காண்பதாக நியூ7ஒன்டர்ஸ் தெரிவித்துள்ளது[6].

2001 இல் நிறுவப்பட்ட இந்த நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தனியார் நன்கொடைகள் மற்றும் ஒளிபரப்பு உரிமைகள் இவற்றைக் கொண்டே இயங்கியது, எந்த பொதுப் பணத்தையோ அல்லது வரிசெலுத்துவோர் பணத்தையோ ஏற்றுக் கொண்டதில்லை[6]. முடிவு அறிவித்த பிறகு, இதன் மூலம் தமக்கு எந்த வருவாயும் கிட்டவில்லை என்றும் தனது முதலீடுகளையே ஓரளவுக்கு தான் மீட்க முடிந்தது என்றும் நியூ7ஒன்டர்ஸ் தெரிவித்தது[7][8].

உலகின் புதிய ஏழு அதிசயங்களுக்கான வாக்கெடுப்பை, மனிதகுல வரலாற்றில் முதலாவது உலகளாவிய ஜனநாயக நடைமுறை என்று அழைத்தார் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தலைவரான பெர்னார்டு வெபர்[9]. 2007 இல் [[இயற்கையின் புதிய ஏழு அதிசயங்கள் (New7Wonders of Nature) என்றழைக்கப்பட்ட இதே மாதிரியான ஒரு போட்டியை இந்த அறக்கட்டளை துவக்கியிருக்கிறது, தேர்வு விண்ணப்பங்கள் டிசம்பர் 31, 2008 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன. இறுதிக்கு தேர்வு பெற்ற 21 அடையாளங்கள் 2010 கோடை வரை வாக்களிப்புக்குட்பட்டதாக இருக்கும்.

பொருளடக்கம்

[மறை]

வரலாறு

உலகின் ஏழு அதிசயங்கள் குறித்த சிந்தனையின் மூலம் ஹீரோடோடஸ் (Herodotus) (கிமு 484 - கிமு 425) மற்றும் காலிமாசஸ் (Callimachus) (கிமு 305 - கிமு 240) காலத்தை நோக்கி பின்செல்கிறது, இவர்கள் கிசாவின் பெரும் பிரமிடு, பாபிலோனின் தொங்கும் தோட்டம், ஒலிம்பியா ஜீயஸ் சிலை, எபசசில் (Ephesus) உள்ள ஆர்திமிஸ் கோவில், ஹலிகர்னாசசில் உள்ள மசோலோஸ் நினைவுச்சின்னம், ரோட்ஸ் பேருருவச்சிலை (Colossus of Rhodes) மற்றும் அலெக்சான்ட்ரியா கலங்கரை விளக்கம் ஆகியவை அடங்கிய பட்டியலை தயாரித்தனர். கிசாவின் பெரும் பிரமிடு மட்டும் தான் இன்னும் நிற்கிறது. ஏனையவை மற்ற ஆறும் நிலநடுக்கம், தீ, அல்லது பிற காரணங்களால் அழிக்கப்பட்டு விட்டன[10].

புதிய ஏழு அதிசயங்களுக்கான இறுதி தேர்வுகள்.

நியூ7ஒன்டர்ஸின் மைல்கற்கள் பக்கத்தின் படி[11], சுவிசிலிருந்து இயங்கும் கனடா நாட்டவரான திரைப்பட இயக்குநர் மற்றும் விமான ஓட்டியான பெர்னார்டு வெபர் இந்த திட்டத்தை செப்டம்பர் 1999 இல் தொடங்கினார். இந்த திட்டத்தின் இணையத் தளம் 2001 இல் தொடங்கப்பட்டது. கனடாவில் இருந்து இயங்கும் தளத்திற்கு வெபர் $700 தொகையை அளித்தார்[1]. இந்தப் புதிய பட்டியலில் சேர்க்கப்பட வேண்டுமென்றால், அதிசயங்கள் மனிதனால் படைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும், 2000 ஆண்டுக்குள் முடிக்கப்பட்டதாக இருக்க வேண்டும், ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் பாதுகாக்கப்பட்டு வருவதாக இருக்க வேண்டும். நவம்பர் 24 2005 வரையில், 177 நினைவுச் சின்னங்கள் பரிசீலனைக்கு வந்தன. ஜனவரி 1, 2006 இல் இந்த பட்டியலில் இருந்து 21 தளங்கள் மட்டும்,[12] ஐந்து கண்டங்களில் இருந்தான உலகின் தலைசிறந்த கட்டிடக்கலை நிபுணர்கள் ஆறுபேர், சாகா ஹதித், சீசர் பெல்லி, டடோ ஆன்டோ, ஹாரி சீட்லர், ஆசிஸ் டேயோப், யுங் ஹோ சாங், கொண்ட ஒரு குழு மற்றும் அதன் தலைவரான யுனெஸ்கோவின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் பேராசிரியர் பெட்ரிகோ மேயர் ஆகியோர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நியூ7ஒன்டர்ஸ் கூறியது. பிறகு உலகின் ஏழு பழைய அதிசயங்களில் எஞ்சியிருப்பதான கிசா பிரமிடுகள் வாக்கெடுப்பில் இருந்து நீக்கப்பட்டு பட்டியல் 20 ஆகக் குறைக்கப்பட்டது, கிசா பிரமிடுக்கு மதிப்பார்ந்த நியூ7ஒன்டர்ஸ் தகுதியாளர் என்ற கவுரவம் அளிக்கப்பட்டது[13].

ஒவ்வொரு இறுதித்தேர்வுக்குமான காரணங்களை இந்த திட்டம் முடிவு செய்தது, சீனப் பெருஞ்சுவரின் விடாமுயற்சி, தாஜ் மஹாலுக்கு காதல், ஈஸ்டர் தீவு சிலைகளின் பிரமிப்பு என.

இடையில் 7 வெற்றிச் சின்னங்களையும், கூடுதலாக அக்ரோபோலிஸ், ஈஸ்டர் தீவு, மற்றும் ஈபிள் கோபுரம் இவற்றை அடக்கிய ஒரு முதல் 10 பட்டியல், புள்ளிகள் கொண்டு வெளியிடப்பட்டது[14].

யுனெஸ்கோவின் முன்னாள் டைரக்டர் ஜெனரலான பெட்ரிகோ மேயர் திட்டத்தின் நிபுணர்குழுவில் தனிநபர் தலைவராக இருந்தார்[15]. நியூ7ஒன்டர்ஸ் யுனெஸ்கோவுடன் தொடர்புடையதல்ல[16].

பரப்புரையின் அடிப்படை இலக்கு உலகளாவிய பரிமாற்றத்தையும் கலாச்சாரங்களுக்கு இடையிலான போற்றலை ஊக்கப்படுவதும் ஆகும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.இது தவிர, "உலக நினைவு" என்று நியூ7ஒன்டர்ஸ் அழைப்பதான ஒன்றும் உருவாக்கப்பட்டது, இதன் பொருள் உலகமெங்கிலும் ஒவ்வொருவரும் நினைவில் கொண்டிருக்கும் பகிர்ந்து கொள்ளும் 7 விஷயங்கள் என்பதாகும்.[17]உலகமறிந்த நினைவுச் சின்னங்கள் இடையிலான போட்டி, அதன் மீதான வருங்கால வாக்கெடுப்புகள், தொடர்பான வியாபாரங்கள், மற்றும் வாக்காளர் தரவுத்தள பயன்பாடு இவற்றில் இருந்து வரும் வருவாயின் ஒரு பகுதியை,[18] உலகின் பல்வேறு மீட்சி திட்டங்களை உருவாக்க, அல்லது அவற்றுக்கு உதவ பயன்படுத்துவதற்கும் நியூ7ஒன்டர்ஸ் விரும்புகிறது.[8][19][2]உலகின் தனித்துவமிக்க கலாச்சார பண்பாட்டு தளங்கள் (...) குறித்த விழிப்புணர்வை வளர்ப்பது என்பது எப்போதும் நியூ7ஒன்டர்ஸின் ஒரு இலக்காக இருந்து வந்திருக்கிறது."இந்த உணர்வை வளர்ப்பது அதனளவிலேயே ஒரு அதிசயமாகத் திகழும்" என்கின்றன ஜூலை 5, 2007 தினத்தின் நியூஸ்விக் மற்றும் MSNBC.[1]

வென்றவை

அகர வரிசையில்:

அதிசயம் இருப்பிடம் பிம்பம்
சிச்சென் இட்சா யுகட்டான், மெக்சிகோ எல் காஸ்டிலோ மீது சுற்றுலாப் பயணிகள் ஏறுகிறார்கள்
மீட்பர் கிறிஸ்து ரியோ டி ஜெனிரோ, பிரேசில்
ரியோ டி ஜெனிரோவில் உள்ள மீட்பர் கிறிஸ்து
கொலோசியம் ரோம், இத்தாலி அந்திசாயும் பொழுதில் கொலோசியம்: சிறந்த வகையில் பாதுகாக்கப்பட்ட பிரிவின் புறத் தோற்றம்
சீனப் பெருஞ்சுவர் சீனா குளிர்காலத்தில் பெருஞ்சுவர்
மாச்சு பிச்சு குஸ்கோ, பெரு
Machu Picchu (மாச்சு பிச்சு)வின் தோற்றம்
பெட்ரா ஜோர்டான்
பெட்ராவில் உள்ள கருவூலம்
தாஜ் மஹால் ஆக்ரா, இந்தியா தாஜ் மஹால்
பட்டியலில் ஒன்று மதிப்புமிக்கது என்னும் கவுரவ அந்தஸ்தை கொண்டது: கிசா பிரமிடு வளாகம்
(உலகின் பழைய அதிசயங்களில் எஞ்சியிருக்கும் இறுதியானது)
கெய்ரோ, எகிப்து பிரமிடு கியோப்ஸ்

எதிர்வினைகள்

ஐக்கிய நாடுகள்

2007 ஆம் ஆண்டில், ஐநாவின் மிலினிய மேம்பாட்டு இலக்குகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளுக்கான அங்கீகாரமாக ஐநாவுடன் ஒரு கூட்டுசெயல்பாட்டு ஏற்பாட்டை நியூ7ஒன்டர்ஸ் செய்துகொண்டது.ஐநா கூறியது:

The New7Wonders campaigns aim to contribute to the process of uplifting the well being and mutual respect of citizens around the world, through encouraging interaction, expression of opinion and direct participation by voting and polling on popular themes and global issues which are understandable to everyone.[20]

UNESCO (யுனெஸ்கோ)

ஐக்கிய நாடுகள் கல்வி,அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு UNESCO (யுனெஸ்கோ), ஜூன் 20, 2007 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், இந்த "தனியார் முன்முயற்சி"யில் தனக்கு தொடர்பு இல்லை என்று மறுபடியும் உறுதிப்படுத்தியது, இந்த கருத்துக்கணிப்பு "இணையத்திற்கு அணுகல் உள்ளவர்களின் கருத்தை மட்டுமே" பிரதிபலிப்பதாக இருப்பதாக அது தெரிவித்தது.செய்திக் குறிப்பு இவ்வாறு முடிந்தது:

There is no comparison between Mr. Weber’s mediatised campaign and the scientific and educational work resulting from the inscription of sites on UNESCO’s World Heritage List. The list of the 7 New Wonders of the World will be the result of a private undertaking, reflecting only the opinions of those with access to the Internet and not the entire world. This initiative cannot, in any significant and sustainable manner, contribute to the preservation of sites elected by this public.[4]

எகிப்து

எகிப்து வர்ணனையாளர்கள் இதனை உண்மையான பழைய அதிசயங்களில் (Ancient Wonders) உயிர் பிழைத்திருக்கும் ஒன்றே ஒன்றான கிசாவின் பெரும் பிரமிடின் அந்தஸ்துக்கான போட்டியாக பார்த்தனர்."இதனை எகிப்துக்கு, அதன் நாகரீகம் மற்றும் நினைவுச் சின்னங்களுக்கு எதிரான ஒரு சதியாகக் காணலாம்" என்று முன்னணி அரசாங்க நாளிதழ் ஒன்றில் தலையங்க ஆசிரியர் அல் சயீத் அல்-நகார் எழுதினார்.இந்த திட்டம் "அபத்தமானது" என்று கூறிய எகிப்தின் கலாச்சார அமைச்சரான பரூக் ஹோஸ்னி அதனை உருவாக்கிய வெபர், "தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் அக்கறை மட்டுமே கொண்ட" ஒரு மனிதர் என்றார்.உலக பாரம்பரிய தள (World Heritage Site)ங்கள் அமைப்பின் எகிப்திய நிபுணரான நகிப் அமின், "வர்த்தக அம்சம் தவிர, வாக்கெடுப்பில் எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லை" என்பதை சுட்டிக் காட்டினார்.

எகிப்திடம் இருந்தான புகார்களுக்குப் பிறகு, நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை உலகின் 7 பழைய அதிசயங்களில் எஞ்சியிருக்கும் இறுதி ஒன்றான கிசா பிரமிடுகளுக்கு மதிப்பார்ந்த நியூ7ஒன்டர்ஸ் போட்டிச்சின்னம் என்னும் கவுரவத்தை அளித்து, அதனை வாக்கெடுப்பில் இருந்து நீக்கியது.ஆனாலும், கிசாவின் பெரும் பிரமிடு அவர்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளின் இணையத் தளத்தில் இடம் பெற்றிருக்கவில்லை.[13]

பிரேசில்

பிரேசில் நாட்டில் வோட் நோ கிறிஸ்டோ (கிறிஸ்துவுக்கு வாக்களியுங்கள்) என்னும் பரப்புரை நடந்தது, இதற்கு தனியார் நிறுவனங்கள் ஆதரவளித்தன, தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் வாக்களிக்க செய்யும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை[21]. இது தவிர, பான்கோ பிராடஸ்கோ மற்றும் ரெடெ க்ளோபோ உள்ளிட்ட முன்னணி நிறுவன ஆதரவாளர்கள் இந்த சிலை முதல் ஏழு இடத்திற்குள் வாக்களிப்பில் இடம் பிடிப்பதற்கு மில்லியன் கணக்கான டாலர்கள் தொகையை செலவளித்தன[1].

நியூஸ்வீக்கில் வெளியான ஒரு கட்டுரையின் படி, சுமார் 10 மில்லியன் பிரேசில் நாட்டினர் இந்த போட்டியில் ஜூலையின் ஆரம்பம் வரை வாக்களித்திருந்தனர்[1]. இது ஒரு மதிப்பீட்டு எண்ணிக்கை தான், ஏனென்றால் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை இந்த பரப்புரை குறித்து இதுபோல் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.

பெரு

பெரு நாட்டின் வர்த்தக மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் தலைமையில் நடத்தப்பட்ட தீவிரமான பிரச்சாரம் அங்கிருக்கும் ஊடகங்களிலும் அதன் மூலம் பெரு மக்களிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, பெரு மக்கள்தொகையினர் அநேகம் பேருக்கும் வீட்டில் இணைய இணைப்பு இல்லாதிருந்த போதிலும் அவர்கள் தங்கள் தேசிய அதிசயத்திற்கு பெருமளவில் வாக்களித்தனர்.புதிய உலக அதிசயங்கள் குறித்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியதோடு மாச்சு பிச்சு தேர்வு செய்யப்பட்டது தேசிய அளவில் கொண்டாடப்பட்டது, குறிப்பாக கஸ்கோ பிரதான சதுக்கத்திலும் லிமாவிலும், அங்கு ஜனாதிபதி ஆலன் கார்சியா ஒரு விழா ஏற்பாடு செய்தார்.

சிலி

ஈஸ்டர் தீவு, மோய்க்கான சிலியின் பிரதிநிதி ஆல்பர்டோ ஹோடஸ் கூறும்போது, மோயிஸ் எட்டாவது இடத்தைப் பிடித்திருப்பதாகவும் இதே புதிய ஏழு அதிசயங்களில் மனோரீதியாக இடம் பிடித்தது போலத்தான் என்று அமைப்பாளரான பெர்னார்டு வெபர் அவரிடம் அளித்த ஒரு கடிதம் கூறுவதாகத் தெரிவித்தார். பங்கு பெற்றவர்களில் இத்தகையதொரு ஆறுதல் கடிதம் பெற்றது தாம் மட்டுமே என்று ஹோடஸ் தெரிவித்தார்[22].

ஜோர்டான்

ஜோர்டானின் ராணி ரனியா அல்-அப்துல்லாவும் ஜோர்டானின் தேசிய கருவூலமான பெட்ராவை ஆதரிக்கும் பரப்புரையில் இணைந்து கொண்டார்[1]. 7 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்டிருக்கும் நாடாக இருந்தபோதிலும், அந்த நாட்டில் இருந்து 14 மில்லியன் வாக்குகளுக்கும் அதிகமாக பதிவானதாகக் கூறப்படுகிறது[1]. இது ஒரு மதிப்பீட்டு எண்ணிக்கை தான், ஏனென்றால் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை இந்த பரப்புரை குறித்து இதுபோல் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.

இந்தியா

இந்தியாவில் பரப்புரை வேகம் பிடித்து ஜூலை 2007 வாக்கில் உச்சத்தை எட்டியது, செய்திச் சானல்கள், வானொலி நிலையங்கள், மற்றும் பல பிரபலங்கள் என அனைவரும் மக்களை வாக்களிக்க கேட்டுக் கொண்டனர்.

இறுதிக்கு தேர்வான மற்றவை

இறுதிக்கு தேர்வான மற்றவை,[23] அகர வரிசை பட்டியலில்:

அதிசயம் இடம்
ஏதென்சின் அக்ரோபோலிஸ் ஏதென்ஸ், கிரீஸ்
ஆலம்பரா கிரானாடா, ஸ்பெயின்
அங்குர் வாட் அங்குர், கம்போடியா
ஈபிள் கோபுரம் பாரிஸ், பிரான்ஸ்
ஹகியா சோபியா இஸ்தான்புல், துருக்கி
கியோமிசு-தெரா கியோடோ, ஜப்பான்
மோய் ஈஸ்டர் தீவு, சிலி
செஞ்சதுக்கம் மாஸ்கோ, ரஷ்யா
நியுஸ்வான்ஸ்டீன் ஃபியுசென், ஜேர்மனி
சுதந்திர தேவி சிலை நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
ஸ்டோனெஞ்ச் அமெஸ்பரி, இங்கிலாந்து
சிட்னி ஓபரா மாளிகை சிட்னி, ஆஸ்திரேலியா
திம்பக்டு மாலி

சுதந்திரச் சிலை


சுதந்திரச் சிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுதந்திரச் சிலையின் முடி உட்பக்கம், நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா

சுதந்திர தேவி சிலை, ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இச்சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது.


கோல்டன் கேற் பாலம்


கோல்டன் கேற் பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோல்டன் கேட் பாலம்
Carries 6 வழிப்பாதை, நடப்போர், மிதிவண்டிகள்
Crosses கோல்டன் கேட்
Locale சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா and Marin County, California
Maintained by Golden Gate Bridge, Highway and Transportation District[1]
Design Suspension, truss arch & truss causeways
Total length 8,981 feet (2,737 m)[2]
Width 90 feet (27 m)
Height 746 feet (227 m)
Longest span 4,200 feet (1,280 m)[3]
Vertical clearance 14 feet (4.3 m) at toll gates, higher truck loads possible
Clearance below 220 feet (67 m) at mean higher high water
AADT 118,000[4]
Opening date 27 மே 1937
Toll US$6.00 (southbound) (US$5.00 with FasTrak)
Connects:
San Francisco Peninsula with Marin County

Coordinates 37°49′11″N 122°28′43″W / 37.81972, -122.47861அமைவு: 37°49′11″N 122°28′43″W / 37.81972, -122.47861
கோல்டன் கேற் பாலம்

எம்பயர் ஸ்டேட் கட்டிடம்

எம்பயர் ஸ்டேட் கட்டிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எம்பயர் ஸ்டேட் கட்டிடம்

நியூயார்க் நகரிலுள்ள 102 மாடிகளைக் கொண்ட ஆர்ட் டெக்கோ கட்டிடமான எம்பயர் ஸ்டேட் கட்டிடம் (Empire State Building), ஷ்ரெவ், லாம்ப் மற்றும் ஹேர்மன் அசோசியேட் நிறுவனத்தினால் 1930ல் வடிவமைப்புச் செய்யப்பட்டது. இது 102 ஆவது தளத்திலுள்ள அவதான நிலையம் வரை, 390 மீ உயரம் கொண்டது. 2001 இல் தாக்குதலுக்குள்ளாகி அழிந்துபோன உலக வர்த்தக மையக் கட்டிடம் கட்டப்படுவதற்குமுன், இந்த நகரத்தில் அதி உயர்ந்த கட்டிடமாக இருந்தது. உலகின் அதியுயர் கட்டிடமாகவும் பல ஆண்டுகள் இருந்தது. கிறிஸ்லர் கட்டிடத்திடமிருந்து, உலகின் அதியுயர் கட்டிடமென்ற பெயரைத் தட்டிச் செல்வதற்காக, இதன் கட்டுமானப் பணிகள் அவசரமாக நிறைவேற்றப்பட்டன. இக்கட்டிடம், 1931, மே 1ல் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. 1940கள் வரை இதன் பெருமளவு அலுவலகத்தளங்கள் வாடகைக்கு எடுக்கப்படாமலேயிருந்தன.

இதன் உச்சியிலுள்ள, பொது அவதான நிலையத்திலிருந்து, நகரின் கவர்ச்சியான காட்சியைக் காணமுடியும். இது பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாகும். கட்டிடத்தின் மேற்பகுதி, ஒளிபாச்சும் மின் விளக்குகளினால், இரவில், பல்வேறு நிற ஒளிகளில், ஒளியூட்டப்படுகின்றது. இந் நிறங்கள் காலங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் பொருத்தமாகத் தெரிவு செய்யப்படுகின்றது. உலக வர்த்தக மையத்தின் அழிவைத்தொடர்ந்து பல மாதங்கள், இது சிவப்பு, வெள்ளை மற்றும் நீலத்தில் ஒளியேற்றப்பட்டது.

இக் கட்டிடம் சம்பந்தப்பட்ட, மிகவும் பிரபலமான, மக்கள் கலாச்சார வெளிப்பாடாகக் கருதப்படக்கூடிய ஒரு விடயம், 1933ல், வெளியிடப்பட்ட, கிங் கொங் ஆங்கிலத் திரைப்படமாகும். இப்படத்தில் முக்கிய பாத்திரமான கிங் கொங் என்னும் இராட்சத மனிதக் குரங்கு, தன்னைப் பிடித்து வைத்திருப்பவர்களிடமிருந்து தப்புவதற்காக, இந்தக் கட்டிடத்தின் உச்சிக்கு ஏறி இறுதியில், அங்கிருந்து விழுந்து இறந்து விடுகிறது. 1983ல் இப் படத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவின் போது, ஒரு காற்றூதப்பட்ட, கிங் கொங் உருவம் உண்மையான எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் வைக்கப்பட்டது. எனினும் இது ஒருபோதும் முழுமையாகக் காற்றூதப்பட்டு இருக்கவில்லை. Love Affair மற்றும் Sleepless In Seattle போன்ற ஆங்கிலத் திரப்படங்களில் இக் கட்டிடத்தின் அவதானிப்பு நிலையம், படத்தில் வரும் காதலர்கள் சந்திக்கும் இடமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிரக வாசிகளின் படையெடுப்பு தொடர்பான, ஐ லவ் லூசி படத்திலும் இவ்விடம் இடம் பெறுகின்றது. பப்பற் என்னும் அறிவியற் கற்பனைத் தொலைக்காட்சித் தொடரின் ஒரு அங்கமான தண்டர்பேர்ட்ஸ் இக் கட்டிடத்தைத் தண்டவாளங்களிலேற்றி வேறிடத்துக்கு நகர்த்தும் முயற்சியைக் காட்டுகிறது.

1945ஆம் ஆண்டு ஜூலை 28, சனிக்கிழமை மு.ப. 9:49 அளவில் ஒரு B-25 மிச்செல் குண்டுவீச்சு விமானம் 79 ஆம் மாடியின் வடக்குப் பக்கத்தில் , தேசிய கத்தோலிக்க நல்வாழ்வுக் கவுன்சில் அமைந்திருந்த பகுதியில் தவறுதலாக மோதியதில் 13 பேர் இறந்தனர். அதனால் ஏற்பட்ட தீ 40 நிமிடத்தில் அணைக்கப்பட்டது.

எம்பயர் ஸ்டேட் கட்டிடம், அமெரிக்கக் குடிசார் பொறியியல் சொசைட்டி (American Society of Civil Engineers) யினால் நவீன ஏழு அற்புதங்களில் ஒன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

இது 350 5 ஆவது அவெனியூ, 33ஆவது மற்றும் 34ஆவது வீதிகளுக்கு இடையே, மான்ஹற்றன் மத்திய நகரில் அமைந்துள்ளது.


360°-Panorama



பெயர்

நியூயார்க் மாநிலத்தின், "எம்பயர் ஸ்டேட்" என்ற செல்லப் பெயர் தொடர்பிலேயே இக் கட்டிடத்துக்குப் பெயரிடப்பட்டது.