Image 1 
Image 1 
Don't Invest, Just Earn
* Earn Re.1/- for every genuine verified registrations generated at Level 3
* Win many items worth 1000s of rupees for free every month by bidding lowest unique bid. (Coming Soon....)
You will earn Re.1/- per genuine registrations made at level 3. To estimate your income we assume that you and all of your downline members will generate at least 1 genuine members per day i.e. 30 members per month (a very low example and easy to achieve where there is absolutely no charges to start the job work), then your income will be ..
காலையில்
நிர்வாணம் பூண்ட
நீலவானம்
மின்சாரம் இல்லாததால்
அடிபம்புத் தண்ணீரில்
குளியல்
பரவசம் படிந்த
பறவையின் மொழி
எப்போதும் போல
இன்றும்
எதிர்வீட்டுக் குழந்தையின்
கையசைப்பு...
இவையன்றி
வேறென்ன சிறப்பு
இருக்கமுடியும்
இந்நாளில்?
இனியவளே
நீ காதல்
வயப்படாதவரை...
--நாவிஷ் செந்தில்குமார்

ஆரம்பத்தில் ஹைக்கூ டைப் கவிதைகள் தான் என்னைக் கவருபவையாக இருந்தன.பெரும்பாலும் காதல் கவிதைகள் படிக்க/உணர எளிமையாக இருக்கும்.
கவிஞர் நவின்பிரகாஷ் கவிதைகளை படித்த போது ,உரையாடல் போன்ற எளிமையான வரிகளில் காதல் ரசம் சொட்ட சொட்ட கொடுத்திருப்பார்.ரொம்ப கஞ்சத்தனமா(சிக்கனம்?), மாசத்துக்கு ஒரு கவிதை தான் எழுதுவார்:P. காதலன் காதலியின் வினாவையும் அதற்கான தனது விடையையும் சொல்லும் ரீதியிலான இந்த கவிதைகளை படித்தால் யாருக்கும் காதலிக்கும் ஆசை வரும்ன்னு தோனுது,.:P.
(கல்யாணம் ஆனவங்க –நிச்சயம் படிக்கனும்.மனைவியை எப்படி காதலிக்கறதுன்னு தெரிஞ்சுக்க..).சாம்பிளுக்கு மூனு கொடுத்திருக்கேன்.
எல்லாத்தையுமே படியுங்க:))
நட்போடு காதலித்து
கொஞ்சம் நானும் கொஞ்சம் நீயும்
கொஞ்சுவது சினம்
முன்பெல்லாம் , ஆழமான வார்த்தைகளால் வீரியமான கருத்துக்களை சொல்ல முயலும் கவிதைகளின் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன்.
அதுலயும் அழுவாச்சி கவிதைகள்ன்னா ரொம்ப தூரம் ஓடியிருப்பேன்.
கவிதைகளின் வார்த்தை விளையாட்டுக்கள், நமது வலது மூளையின் ஹெமிஸ்பியரின் ஆதிக்கம் என்பேன். ஆனாலும் பாரதி,சித்தர் பாடல்கள்,வைரமுத்துவின் கவிதைகள் போன்றவை ஏனோ எனக்கு பிடித்துப்போனது. வார்த்தை அலங்காரங்களைத்தாண்டி சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கள் இடம்பெற்றதாலோன்னு தோனுது.
பலகாலமாக நான் அனுபவிக்கத் தவறிய ஆழமான கவிதை வகையை எனக்கு அறிமுகப் படுத்தியது கவிஞர் வேதாவின் கவிதைகள்ன்னு சொல்லலாம்
கவிஞர் வேதாவின் “தேடத்தான் முயல்கிறேன்”
அதைப் படிக்கும்போது விசுவின் ஸ்டெயிலுல தான் ஆரம்பத்துல தோனுச்சு.ஆனா ரெண்டு மூனு முறை யோசிச்சப்பத்தான் அந்த கவிதையில ஏதோ ஒருக்கறதா தோனுச்சு.(எழுதனவங்களுக்கே தோனாத மீனிங்கெல்லாம் படிக்கறவங்களுக்குத்தானே தோனும்.:)))) .(சுத்தம். மூனு முறை யோசிப்பப்பறம் தான் ,டவுட்டே வந்துச்சா?ன்னு கேக்கறது எனக்கு புரியுது.).அவரோட பல கவிதைகள்ல ஆழமான உணர்வுகள் புதைந்திருகிறதா உணர முடியுது.
புரிதல் என்பது
சீக்கிரம் கேட்டுவிடு எனக்கான கேள்வியை
கவிதைகளின் ஒருவிதம், மார்டன் ஆர்ட்ஸ் போல சிந்தனையை தூண்ட ஒரு ஊக்கியாக செயல்படனும்.ஆனா சிந்தனையின் திசையை கட்டுப்படுத்தாம படிக்கறவங்க சுதந்திரமா சிந்திக்க வாய்ப்புக்கள் நிறைந்திருக்கனும்.
அதுக்கப்பறம் இப்டிப்பட்ட இலைமறை குழப்ப கவிதைகளை தேடிப்படிக்கும் அளவு கொஞ்சம் ”சீரியஸ் டைப்” கவிதைகளின் ரசிகனானேன்.
அப்போது ஆரம்பித்த அந்த கவிதைப் பயணத்தில் இன்று பல பல கவிஞர்/கவிதாயினிகளின் படைப்புக்களுடன் சுவாசிக்கிறேன்.
கவிதாயினி காயத்ரி.இவரை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை..., என்றோ இவரது நகைச்சுவை பதிவை படிச்சுப்புட்டு விழுந்து விழுந்து சிரித்தது ஞாபகம் இருக்கு.அப்புறம் இன்னொரு முறை இவங்க சீரியஸ் பதிவை படிச்சுப்பார்த்தா..
பெரிய பெரிய எழுத்தாளர்களின் கைத்தேர்ந்த எழுத்துக்களை படிக்கும் ஒரு உணர்வு,.எண்ணங்களை எழுத்துக்களாய் வடித்தெடுக்கும் கலை இவருக்கு இயல்பாகவே வருகிறது.சாதாரண விஷயங்களிலும் சுலபமாய் நகைச்சுவையை பொருத்தி ரசனையாய் சொல்ல வருகிறது.
தற்போது பின்னூட்டதிற்கு பதில் சொல்லா விரதம் இருந்து வருகிறார். படத்துல கமலை நீங்க நல்லவரா? கெட்டவரா?ன்னு கேட்ட மாதிரி இவர் காமெடியா? சீரியஸ்ஸான்னு யோசிச்சிக்கிட்டிருக்கும்போதே.. சின்ன சின்ன கவிதைகளில் ஆழமான அர்த்தங்கள் கொடுத்து மிரட்டுகிறார்:P .கோலம் போடும்போது வேணுமின்னே ஒரு புள்ளி எக்ஸ்ராவா வைச்சுட்டு ,எப்டி ஃபீல் பண்ணறாங்கன்னு பாருங்களேன்:P
புள்ளி
பிய்த்தெரியப்படும் இதழ்கள்
வனம்
இதுல சொற்களை மனங்களுக்கான விதைகளாய் சொல்லற கற்பனை ஏதோ என்னைக் கவர்ந்தது,.என்னா ஒரு இமாஜினேஷன்,ஒக்காந்து யோசிப்பாய்ங்களோ?
நம்ம டிரிம்ஸ் மாம்ஸ். இவரின் தொகுப்புக் கவிதைகள் நமக்குள் கனவுகளை விதைப்பது என்னவோ உண்மை.சில சமயம் அவர் தன் நிஜ வாழ்க்கைக்கு பிளாக் விடு தூதுவாக கவிதையை யூஸ் பண்ணுகிறாரான்னு கூட தோனும். அவ்வளவு ரசனையா கவிதை சொல்லுவார்.திடீருன்னு ஏதாவது தத்துவத்தை எடுத்துக்கிட்டு ஆராய்ச்சி பதிவு செய்ய கிளம்பிடுவார்.சின்ன வயதுதான்னாலும்,தெளிவான சிந்தனை.நட்பான குணம் உடையவர்.திகட்ட திகட்ட கவிதைத் தொடர்களை எழுதி கலக்குகிறார்.
இவரது மொத்தம் 7 தேவதைக் கவிதைத் தொடர்களின் லிங்க் இந்த சுட்டியின் கடைசியில் உள்ளது.படித்து ரசியுங்கள்.
தேவதைப் பிரிவு
தமிழ்நதி அக்காவின் கவிதைகள் ஒரு பல்சுவை எனலாம்,சில நவீனத்துவ வகையைச் சேர்ந்தவை. சமுகம்,காதல்,யதார்த்தம் என எதையும் விட்டு வைப்பதில்லை. சமிபத்தில் ஆனந்த விகடனில் வெளியிடப்பட்ட இவரது பேட்டியின் தன்னிலை விளக்கத்தையும் இவர் பதிவில் வெளியிடவேண்டிய சூழ்நிலையை பத்திரிக்கை வியாபார யுத்திகள் உருவாக்கியதை நினைத்து வருந்த வேண்டியுள்ளது.இவரது தீபாவளி(லி) கவிதையைக் பாருங்களேன்J.
நம்ம செல்வி ஷங்கர் அக்கா.. எளிய சுருக்கமான அதே சமயம் தெளிவான விளக்கத்தோடு திருக்குறள் பொழிப்புறை எழுதியிருக்காங்க. தண்ணீரால் வேறுபட்டு கண்ணீரை பெருக்கிக்கொண்ட சமுதாயங்களுக்காக, வன்முறை இல்லாத அழகான அறிவுறையை பாருங்க இந்த கவிதையில்,இதை யாராவது கன்னடத்தில் மொழிப்பெயர்த்து வெளியிடுவார்களா?
ஈரத்தோடு இணைந்திடுவோம்
எல்லா நண்பர்களின் பிறந்தநாளுக்கும் வாழ்த்து பதிவு போட்டு, அவங்களை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி,சந்தோஷப்படும் நம்ம தோழி ஜி3 .நட்புக்கு வாழ்த்து சொல்லவே வலைப்பதிவு வைச்சிருக்கும் ஜி3க்குள்ளே ஒரு கவிதாயினி தூங்கிக்கிட்டிருக்கான்னு தெரிஞ்ச போது ஆச்சர்யப்பட்டு போனேன்.ஜி3யின் சின்ன சின்ன கவிதைகளாலான தொகுப்பை பார்க்க நேர்ந்த போது நிஜமாகவே வியப்பு.
நேரமில்லாமையாலோ இல்லை வேறு காரணங்களாலோ ஜி3 தனக்குள்ள இருக்குற அந்த கவிதாயினிய முழுமையா எழுப்பி விடாம,இன்னும் தூங்க விட்டுக்கிட்டிருக்கறதுக்கு (ஜி3க்கு பொறாமை.. பொறாமை..) நமது பலமான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்வோம்.வாங்க..:)
அவரது இந்த கவிதையைப் படித்துப் பாருங்களேன்.
காதல் கவிதைகள்
கவிஞர் சகாராவின் கவிதைகள் பலசமயங்களுல சோகங்களை தன்னுள் அடக்கியவாறு இருந்தாலும். காதலைத் தவிர சமுகப் பிரச்சனைகளை / அவலங்களை கண்டு வருந்தும் மனதின் வடிகாலாய் கவிதையை பயன்படுத்துவது என்னைக் ரொம்ப கவர்ந்தது..சராசரியாய் நான் தினமும் காணும் வறுமையின் பல வடிவங்கள் ,இவரது பார்வையில் மட்டும் ஏன் இப்படி ஆழமாக கவனிக்கத் தக்கவையாக இருக்கின்றன?. இவற்றை கண்டும்,நாம் இதை ஒரு இயல்பான அன்றாட காட்சியாக ஏற்றுக்கொள்ள பழகிவிட்டோமா? என நான் பலமுறை யோசித்திருக்கிறேன்.
இப்போது கவிதைகளை மட்டுமில்லாது தனது எண்ணங்களையும் தனிப் பதிவாக துவங்கி சமுக அவலங்களைச் சாடுவது மட்டுமில்லாமல் மனித உறவுகள்(human relationships)ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.
கவிதை நீ நான்...
காதல் காதல்
கவிஞர் அருட்பெருங்கோ.இவரது எழுத்துக்கள் சமீபத்தில்தான் எனக்கு அறிமுகம் ஆனாலும்,கவிதைகள் ஆர்வமூட்டுபவையாக இருக்கின்றன.வரிகள் காதல் தேன் தடவியவையாய் இருக்கின்றன.இவரது காதல் வாரம் தொடரில்,நீங்களே ஒரு சாம்பிள் பாருங்களேன்.
காதலும் கடைசியுமாய்
சிறப்புக்கவிதை-பிப்ரவரி 14
நம்ம இம்சை அரசி. வலை(விளை)யாடிக்கொண்டிருந்த போது இவருடைய இந்த கவிதையைப் படிக்க நேர்ந்தது. அடடா.. எம்புட்டு சிம்பிள் & டச்சிங்ன்னு தோனுச்சு. படிச்சுப் பாருங்களேன்.
காதலர் தினம்
இம்சை அரசியின் பதிவுல,கதைகளை எந்த சூழ்நிலையிலும் நம்பி படிக்கலாம்.கதை முடிவில் அழுவாச்சியாய் ஏதும் இருக்காது என்பதால்.
எல்லா கதைகளிலும் நல்ல முடிவை கொடுக்கும் இவரது பாஸிடிவ் திங்கிங் பாராட்டுக்குரியது.
கண்மணி இதழில் இவர் 2 நாவல்கள் எழுதியிருக்கிறார்ன்னு அறிந்ததில் வியப்பு இல்லை.இவரது எழுத்துக்களே அவரை நிருபிக்கின்றன. இம்சையின் இம்சையை வர்ர, மே மாசத்துலருந்து தாங்கிக்க ஒருத்தர் மாட்டிக்கிட்டாருங்கோ:P. ஆமாம் நிச்சயதார்த்தம் இனிதே நடந்தேறிவிட்டது.
மாப்பிள்ளை,மணப்பெண்ணின் இம்சைகளுக்கு சரண்டராகிவிட்டதா மேலதிக தகவல் வந்துள்ளது.தினமும் எழுந்ததும் மணப்பெண்ணின் பிளாகில் ரெண்டு பதிவுகளை படிச்சுட்டுதான் பல்விளக்கவே போறாராம்ல்ல...(காரணம்-மாப்பிள்ளை தன்னோட பதிவெல்லாம் படிச்சுட்டாரான்னு டெஸ்ட் பண்ண,பதிவுலருந்து கேள்விகள் கேட்கப்படும்ன்னு மணப்பெண் போட்ட கட்டளை தானாம்).
திருமண நாளை எதிர்நோக்கி தினமும் ஆபிஸ்ல கனவுல டூயட் பாடிக்கிட்டிருக்கற தோழி இம்சை அரசி என்கிற நம்ம ஜெயந்திக்கு நம்ம எல்லாருடைய சார்புலயும் வாழ்த்துக்களை சொல்லிக்குவோம்.:)
கவிஞர் எழில்பாரதி,இயல்பா அன்றாடம் நிகழும் நிகழ்ச்சிகளை,ரசனையா பதித்துக்கொண்டிருக்கும் இவர் ஒரு கதாசிரியரும் கூட,அன்றாடம் வாழ்வில் நாம் காணும் சராசரி விஷயங்கள் இவரது கதைகளின் கருவாகும்போது ,அதன் பார்வையே தனியாகிவிடுகிறது.அவ்வப்போது இவரிடம் வலைத்தோட்டத்தில் கவிதைப் பூக்களும் பூக்கின்றன.பாருங்களேன் இவரது கவிதைகள் எவ்வளவு அருமையா இருக்குன்னு.
குறும்புகள் + வெட்கங்கள் =காதல்
| Every tongue will acknowledge God - (Romans 14:11) | |||
| Latin | English | Tamil | New Tamil |
| In nomine Patris, et Filii, et Spiritus Sancti. Amen | In the name of the Father, and of the Son and of the Holy Spirit. Amen | சிலுவை அடையாளம் பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே, - ஆமென். | தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே - ஆமென். |
| Credo in Deum Patrem omnipotentem, Creatorem caeli et terrae. Et in Iesum Christum, Filium eius unicum, Dominum nostrum, qui conceptus est de Spiritu Sancto, natus ex Maria Virgine, passus sub Pontio Pilato, crucifixus, mortuus, et sepultus, descendit ad infernos, tertia die resurrexit a mortuis, ascendit ad caelos, sedet ad dexteram Dei Patris omnipotentis, inde venturus est iudicare vivos et mortuos. Credo in Spiritum Sanctum, sanctam Ecclesiam catholicam, sanctorum communionem, remissionem peccatorum, carnis resurrectionem, vitam aeternam. Amen. | I believe in God, the Father Almighty, Creator of Heaven and Earth, and in Jesus Christ His only Son, Our Lord, who was conceived of the Holy Spirit, born of the Virgin Mary, suffered under Pontius Pilate, was crucified, died and was buried. On the third day, he rose again. He ascended into Heaven and is seated at the right hand of God, the Father Almighty. He will come again to judge the living and the dead. I believe in the Holy Spirit, the Holy Catholic Church, the Communion of Saints, the forgiveness of sins, the resurrection of the body, and life everlasting. Amen. | ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல பிதா அவரே. சர்வேசுரனின் ஏக சுதனாய் செனித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார் . கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, மெய்யங் கடவுளினின்று மெய்யங்கடவுளாக செனித்தவர். இவர் செனித்தவர், உண்டாக்கப் பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நம் மீட்பக்காகவும் வானகமிருந்து இரங்கினார். (தலை வணங்கவும்,) பரிசுத்த ஆவியினால் கன்னிமரியாளிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார். மேலும் நமக்காக போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.வேதாகமத்தின் படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். சீவியரையும், மரித்தவரையும் நடுத்தீர்க்க மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கன்றார். அவரது அரசுக்கு முடிவு இராது. பிதாவினின்றும் சுதனின்றும் பறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியையும்விசுவசிக்கிறேன். இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதணையும் மகிமையும் பெறுகின்றார். தீர்க்கத்தரிசிகளின் வாயிலாக பேசியவர் இவரே. ஏக பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். பாவ மன்னிப்பக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். மரித்தோர் உத்தானத்தையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன். -ஆமென். | விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த / எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய / இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவர் தூய ஆவியாரால் கருவுற்று / தூய கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு / சிலுவையில் அறையப்பட்டு / இறந்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி / மூன்றாம்நாள் / இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகம் சென்று / எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து / வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் / தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார். தூய ஆவி யாரை நம்புகிறேன். தூய கத்தோலிக்கத் திருச்சபையையும் / புனிதர்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன். பாவ மன்னிப்பை நம்புகிறேன். உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். நிலை வாழ்வை நம்புகிறேன் - ஆமென். |
| PATER NOSTER, qui es in caelis, sanctificetur nomen tuum. Adveniat regnum tuum. Fiat voluntas tua, sicut in caelo et in terra. Panem nostrum quotidianum da nobis hodie, et dimitte nobis debita nostra sicut et nos dimittimus debitoribus nostris. Et ne nos inducas in tentationem, sed libera nos a malo. Amen. | Our Father, who art in Heaven, hallowed be Thy name, Thy kingdom come, Thy will be done on earth as it is in Heaven. Give us this day our daily bread, and forgive us our trespasses as we forgive those who trespass against us. And lead us not into temptation but deliver us from evil. Amen | பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக; உம்முடைய இராச்சியம் வருக; உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழவிடாதேயும், தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென். | விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும் - ஆமென். |
| AVE MARIA, gratia plena, Dominus tecum. Benedicta tu in mulieribus, et benedictus fructus ventris tui, Iesus. Sancta Maria, Mater Dei, ora pro nobis peccatoribus, nunc, et in hora mortis nostrae. Amen. | Hail Mary, full of grace, the Lord is with thee, blessed art thou amongst women and blessed is the fruit of thy womb, Jesus. Holy Mary Mother of God, pray for us sinners now and at the hour of our death. Amen | அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே; பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே; உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. அர்ச்சிஷ்ட மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் - ஆமென். | அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! / ஆண்டவர் உம்முடனே. / பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. / உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் / ஆசி பெற்றவரே./ தூய மரியே / இறைவனின் தாயே / பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக / இப்பொழுதும் / எங்கள் இறப்பின் வேளையிலும் / வேண்டிக்கொள்ளும் - ஆமென். |
| GLORIA PATRI, et Filio, et Spiritui Sancto. Sicut erat in principio, et nunc, et semper, et in saecula saeculorum. Amen. | Glory be to the Father and to the Son and to the Holy Spirit. As it was in the beginning is now, and ever shall be, world without end. Amen | பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக - ஆமென். | தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக. தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக - ஆமென். |
Renunciation according to Thirukkural
341
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
ஒருவன் எந்த எந்தப் பொருளிலிருந்து பற்று விடுபட்டவன் ஆகின்றானோ, அவன் அந்த அந்தப் பொருளால் துன்பம் அடைவதில்லை.
- From whatever, aye, whatever, man gets free, From that, aye, from that, no more of pain hath he!
342
வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டு இயற் பால பல.
துன்பம் அற்ற வாழ்வை விரும்பினால் ஆசைகளை எல்லாம் விட்டுவிடல் வேண்டும்; அப்படி விட்டு விட்டபின் இவ்வுலகில் அடையக்கூடிய இன்பம் பலவாகும்.
- Renunciation made-even here true pleasures men acquire; Renounce While time is yet, if to those pleasures you aspire.
343
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.
ஐந்து வகையான புலன்களின் ஆசைகளையும் அடக்கி வெல்லுதல் வேண்டும்; அவற்றிற்கு வேண்டிய பொருளாசைகளையெல்லாம் ஒருசேர விட்டு விடுதல் வேண்டும்.
- Perceptions of the five must all expire:- Relinquished in its order each desire.
344
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.
ஒரு பொருளின்மீது ஆசையற்றிருத்தலே தவநெறியின் இயல்பாகும்; ஆசையுள்ளதானால் மீண்டும் உலக போகத்தில் மயங்குவதற்கு வழியாகும்.
- Privation absolute is penance true; Possession brings bewilderment anew.
345
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.
பிறவித் துன்பத்தை ஒழிக்க முயல்பவர்கட்கு உடம்பு மிகையான பொருள்; ஆகவே, அதற்கு மற்ற ஆசைகளின் தொடர்பு கொள்வது எதற்காகவோ?
- To those who severance seek from beings varied strife, Flesh is burthen sore; what then other bonds of life?
346
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.
உடலை யான் எனவும், பொருள்களை எனது எனவும் நினைக்கின்ற மயக்கத்தை அறுத்தெறிகின்றவன் வானோர்க்கும் எட்டாத உயர்ந்த உலகம் சேர்வான்.
- Who kills conceit that utters I and mine, Shall enter realms above the powers divine.
347
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
பொருள்களின் மீதுள்ள பற்றுகளையே இறுகப் பற்றிக் கொண்டு ஆசையை விடாதவரையில், துன்பங்களும் விடாமல் பற்றிக் கொண்டிருக்கும்.
- Who cling to things that cling and eager clasp, Grieves cling to them with unrelaxing grasp.
348
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
முற்றுந் துறந்தவரே மேலான நிலையினர் ஆவர்; மற்றையோர் மயங்கி ஆசை வலையில் அகப்பட்டுக் கொண்டவர்களே ஆவர்.
- Who thoroughly renounce on highest height are set; The rest, bewildered, lie entangled in the net.
349
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
இருவகைப் பற்றுகளும் அறுந்து போன அப்பொழுதே அந்நிலை. பிறவித் துன்பத்தை ஒழிக்கும்; மேலும் உலக நிலையாமையும் அப்பொழுதே காணப்படும்.
- When that which clings falls off, severed is beings tie; All else will then be seen as instability.
350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
பற்றில்லாதவனான இறைவனது பற்றினை மட்டிலுமே விடாது பற்றுக. உலகப் பற்றுகளை விடுவதற்காக, அதனையே எப்போதும் விடாமல் பற்றிக் கொள்க.
- Cling thou to the which He, to whom naught clings, hath bid thee cling, Cling to that bond, to get thee free from every clinging thing.
| எல்லாம் இயேசுவே, - எனக்கெல்லாமேசுவே. தொல்லைமிகு மிவ்வுலகில் - துணை இயேசுவே 1.ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும், நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும், 2.தந்தைதாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர், சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும், 3.கவலையில் ஆறுதலும், கங்குலிலென் ஜோதியும், கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும், 4.போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில் ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும், 5.அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும் பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும் 6.ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும் ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும். |
உம்மையே அறிந்தேன் என்னையே கொடுத்தேன்2
கனிவாய் ஏற்றிடுவாய்
பலியாய் மாற்றிடுவாய்
உம்மையே அறிந்தேன் என்னையே கொடுத்தேன்
கனிவாய் ஏற்றிடுவாய்
பலியாய் மாற்றிடுவாய்
*Material use in our training seminars for your animators.
*These papers are not notes to be read, like a road.
*They are not lecture notes, nor are most of them self-explanatory.
*They make sense chiefly as training material.
Those who love deeply
Never grow old
They may die of old age
But they die young
May you grow up, grow old help many and die young!
| Tamil Dictionaries and Searches | ||||
| ||||