Monday, April 25, 2011

கவிதைகள்

கப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |

Wednesday, April 16, 2008


கொஞ்சம் கவிதாயினிகள்,கொஞ்சம் கவிஞர்கள் & கொஞ்சும் கவிதைகள்.

ஆரம்பத்தில் ஹைக்கூ டைப் கவிதைகள் தான் என்னைக் கவருபவையாக இருந்தன.பெரும்பாலும் காதல் கவிதைகள் படிக்க/உணர எளிமையாக இருக்கும்.


கவிஞர் நவின்பிரகாஷ் கவிதைகளை படித்த போது ,உரையாடல் போன்ற எளிமையான வரிகளில் காதல் ரசம் சொட்ட சொட்ட கொடுத்திருப்பார்.ரொம்ப கஞ்சத்தனமா(சிக்கனம்?), மாசத்துக்கு ஒரு கவிதை தான் எழுதுவார்:P. காதலன் காதலியின் வினாவையும் அதற்கான தனது விடையையும் சொல்லும் ரீதியிலான இந்த கவிதைகளை படித்தால் யாருக்கும் காதலிக்கும் ஆசை வரும்ன்னு தோனுது,.:P.

(கல்யாணம் ஆனவங்க –நிச்சயம் படிக்கனும்.மனைவியை எப்படி காதலிக்கறதுன்னு தெரிஞ்சுக்க..).சாம்பிளுக்கு மூனு கொடுத்திருக்கேன்.
எல்லாத்தையுமே படியுங்க:))

நட்போடு காதலித்து

கொஞ்சம் நானும் கொஞ்சம் நீயும்

கொஞ்சுவது சினம்


முன்பெல்லாம் , ஆழமான வார்த்தைகளால் வீரியமான கருத்துக்களை சொல்ல முயலும் கவிதைகளின் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன்.
அதுலயும் அழுவாச்சி கவிதைகள்ன்னா ரொம்ப தூரம் ஓடியிருப்பேன்.
கவிதைகளின் வார்த்தை விளையாட்டுக்கள், நமது வலது மூளையின் ஹெமிஸ்பியரின் ஆதிக்கம் என்பேன். ஆனாலும் பாரதி,சித்தர் பாடல்கள்,வைரமுத்துவின் கவிதைகள் போன்றவை ஏனோ எனக்கு பிடித்துப்போனது. வார்த்தை அலங்காரங்களைத்தாண்டி சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கள் இடம்பெற்றதாலோன்னு தோனுது.





பலகாலமாக நான் அனுபவிக்கத் தவறிய ஆழமான கவிதை வகையை எனக்கு அறிமுகப் படுத்தியது கவிஞர் வேதாவின் கவிதைகள்ன்னு சொல்லலாம்
கவிஞர் வேதாவின் “தேடத்தான் முயல்கிறேன்

அதைப் படிக்கும்போது விசுவின் ஸ்டெயிலுல தான் ஆரம்பத்துல தோனுச்சு.ஆனா ரெண்டு மூனு முறை யோசிச்சப்பத்தான் அந்த கவிதையில ஏதோ ஒருக்கறதா தோனுச்சு.(எழுதனவங்களுக்கே தோனாத மீனிங்கெல்லாம் படிக்கறவங்களுக்குத்தானே தோனும்.:)))) .(சுத்தம். மூனு முறை யோசிப்பப்பறம் தான் ,டவுட்டே வந்துச்சா?ன்னு கேக்கறது எனக்கு புரியுது.).அவரோட பல கவிதைகள்ல ஆழமான உணர்வுகள் புதைந்திருகிறதா உணர முடியுது.

புரிதல் என்பது


சீக்கிரம் கேட்டுவிடு எனக்கான கேள்வியை



கவிதைகளின் ஒருவிதம், மார்டன் ஆர்ட்ஸ் போல சிந்தனையை தூண்ட ஒரு ஊக்கியாக செயல்படனும்.ஆனா சிந்தனையின் திசையை கட்டுப்படுத்தாம படிக்கறவங்க சுதந்திரமா சிந்திக்க வாய்ப்புக்கள் நிறைந்திருக்கனும்.
அதுக்கப்பறம் இப்டிப்பட்ட இலைமறை குழப்ப கவிதைகளை தேடிப்படிக்கும் அளவு கொஞ்சம் ”சீரியஸ் டைப்” கவிதைகளின் ரசிகனானேன்.
அப்போது ஆரம்பித்த அந்த கவிதைப் பயணத்தில் இன்று பல பல கவிஞர்/கவிதாயினிகளின் படைப்புக்களுடன் சுவாசிக்கிறேன்.







கவிதாயினி காயத்ரி.இவரை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை..., என்றோ இவரது நகைச்சுவை பதிவை படிச்சுப்புட்டு விழுந்து விழுந்து சிரித்தது ஞாபகம் இருக்கு.அப்புறம் இன்னொரு முறை இவங்க சீரியஸ் பதிவை படிச்சுப்பார்த்தா..

பெரிய பெரிய எழுத்தாளர்களின் கைத்தேர்ந்த எழுத்துக்களை படிக்கும் ஒரு உணர்வு,.எண்ணங்களை எழுத்துக்களாய் வடித்தெடுக்கும் கலை இவருக்கு இயல்பாகவே வருகிறது.சாதாரண விஷயங்களிலும் சுலபமாய் நகைச்சுவையை பொருத்தி ரசனையாய் சொல்ல வருகிறது.

தற்போது பின்னூட்டதிற்கு பதில் சொல்லா விரதம் இருந்து வருகிறார். படத்துல கமலை நீங்க நல்லவரா? கெட்டவரா?ன்னு கேட்ட மாதிரி இவர் காமெடியா? சீரியஸ்ஸான்னு யோசிச்சிக்கிட்டிருக்கும்போதே.. சின்ன சின்ன கவிதைகளில் ஆழமான அர்த்தங்கள் கொடுத்து மிரட்டுகிறார்:P .கோலம் போடும்போது வேணுமின்னே ஒரு புள்ளி எக்ஸ்ராவா வைச்சுட்டு ,எப்டி ஃபீல் பண்ணறாங்கன்னு பாருங்களேன்:P

புள்ளி

பிய்த்தெரியப்படும் இதழ்கள்

வனம்

இதுல சொற்களை மனங்களுக்கான விதைகளாய் சொல்லற கற்பனை ஏதோ என்னைக் கவர்ந்தது,.என்னா ஒரு இமாஜினேஷன்,ஒக்காந்து யோசிப்பாய்ங்களோ?








நம்ம டிரிம்ஸ் மாம்ஸ். இவரின் தொகுப்புக் கவிதைகள் நமக்குள் கனவுகளை விதைப்பது என்னவோ உண்மை.சில சமயம் அவர் தன் நிஜ வாழ்க்கைக்கு பிளாக் விடு தூதுவாக கவிதையை யூஸ் பண்ணுகிறாரான்னு கூட தோனும். அவ்வளவு ரசனையா கவிதை சொல்லுவார்.திடீருன்னு ஏதாவது தத்துவத்தை எடுத்துக்கிட்டு ஆராய்ச்சி பதிவு செய்ய கிளம்பிடுவார்.சின்ன வயதுதான்னாலும்,தெளிவான சிந்தனை.நட்பான குணம் உடையவர்.திகட்ட திகட்ட கவிதைத் தொடர்களை எழுதி கலக்குகிறார்.

இவரது மொத்தம் 7 தேவதைக் கவிதைத் தொடர்களின் லிங்க் இந்த சுட்டியின் கடைசியில் உள்ளது.படித்து ரசியுங்கள்.
தேவதைப் பிரிவு






தமிழ்நதி அக்காவின் கவிதைகள் ஒரு பல்சுவை எனலாம்,சில நவீனத்துவ வகையைச் சேர்ந்தவை. சமுகம்,காதல்,யதார்த்தம் என எதையும் விட்டு வைப்பதில்லை. சமிபத்தில் ஆனந்த விகடனில் வெளியிடப்பட்ட இவரது பேட்டியின் தன்னிலை விளக்கத்தையும் இவர் பதிவில் வெளியிடவேண்டிய சூழ்நிலையை பத்திரிக்கை வியாபார யுத்திகள் உருவாக்கியதை நினைத்து வருந்த வேண்டியுள்ளது.இவரது தீபாவளி(லி) கவிதையைக் பாருங்களேன்J.





நம்ம செல்வி ஷங்கர் அக்கா.. எளிய சுருக்கமான அதே சமயம் தெளிவான விளக்கத்தோடு திருக்குறள் பொழிப்புறை எழுதியிருக்காங்க. தண்ணீரால் வேறுபட்டு கண்ணீரை பெருக்கிக்கொண்ட சமுதாயங்களுக்காக, வன்முறை இல்லாத அழகான அறிவுறையை பாருங்க இந்த கவிதையில்,இதை யாராவது கன்னடத்தில் மொழிப்பெயர்த்து வெளியிடுவார்களா?
ஈரத்தோடு இணைந்திடுவோம்









எல்லா நண்பர்களின் பிறந்தநாளுக்கும் வாழ்த்து பதிவு போட்டு, அவங்களை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி,சந்தோஷப்படும் நம்ம தோழி ஜி3 .நட்புக்கு வாழ்த்து சொல்லவே வலைப்பதிவு வைச்சிருக்கும் ஜி3க்குள்ளே ஒரு கவிதாயினி தூங்கிக்கிட்டிருக்கான்னு தெரிஞ்ச போது ஆச்சர்யப்பட்டு போனேன்.ஜி3யின் சின்ன சின்ன கவிதைகளாலான தொகுப்பை பார்க்க நேர்ந்த போது நிஜமாகவே வியப்பு.

நேரமில்லாமையாலோ இல்லை வேறு காரணங்களாலோ ஜி3 தனக்குள்ள இருக்குற அந்த கவிதாயினிய முழுமையா எழுப்பி விடாம,இன்னும் தூங்க விட்டுக்கிட்டிருக்கறதுக்கு (ஜி3க்கு பொறாமை.. பொறாமை..) நமது பலமான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்வோம்.வாங்க..:)
அவரது இந்த கவிதையைப் படித்துப் பாருங்களேன்.

காதல் கவிதைகள்








கவிஞர் சகாராவின் கவிதைகள் பலசமயங்களுல சோகங்களை தன்னுள் அடக்கியவாறு இருந்தாலும். காதலைத் தவிர சமுகப் பிரச்சனைகளை / அவலங்களை கண்டு வருந்தும் மனதின் வடிகாலாய் கவிதையை பயன்படுத்துவது என்னைக் ரொம்ப கவர்ந்தது..சராசரியாய் நான் தினமும் காணும் வறுமையின் பல வடிவங்கள் ,இவரது பார்வையில் மட்டும் ஏன் இப்படி ஆழமாக கவனிக்கத் தக்கவையாக இருக்கின்றன?. இவற்றை கண்டும்,நாம் இதை ஒரு இயல்பான அன்றாட காட்சியாக ஏற்றுக்கொள்ள பழகிவிட்டோமா? என நான் பலமுறை யோசித்திருக்கிறேன்.
இப்போது கவிதைகளை மட்டுமில்லாது தனது எண்ணங்களையும் தனிப் பதிவாக துவங்கி சமுக அவலங்களைச் சாடுவது மட்டுமில்லாமல் மனித உறவுகள்(human relationships)ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.

கவிதை நீ நான்...

காதல் காதல்








கவிஞர் அருட்பெருங்கோ.இவரது எழுத்துக்கள் சமீபத்தில்தான் எனக்கு அறிமுகம் ஆனாலும்,கவிதைகள் ஆர்வமூட்டுபவையாக இருக்கின்றன.வரிகள் காதல் தேன் தடவியவையாய் இருக்கின்றன.இவரது காதல் வாரம் தொடரில்,நீங்களே ஒரு சாம்பிள் பாருங்களேன்.

காதலும் கடைசியுமாய்

சிறப்புக்கவிதை-பிப்ரவரி 14









நம்ம இம்சை அரசி. வலை(விளை)யாடிக்கொண்டிருந்த போது இவருடைய இந்த கவிதையைப் படிக்க நேர்ந்தது. அடடா.. எம்புட்டு சிம்பிள் & டச்சிங்ன்னு தோனுச்சு. படிச்சுப் பாருங்களேன்.
காதலர் தினம்

இம்சை அரசியின் பதிவுல,கதைகளை எந்த சூழ்நிலையிலும் நம்பி படிக்கலாம்.கதை முடிவில் அழுவாச்சியாய் ஏதும் இருக்காது என்பதால்.
எல்லா கதைகளிலும் நல்ல முடிவை கொடுக்கும் இவரது பாஸிடிவ் திங்கிங் பாராட்டுக்குரியது.

கண்மணி இதழில் இவர் 2 நாவல்கள் எழுதியிருக்கிறார்ன்னு அறிந்ததில் வியப்பு இல்லை.இவரது எழுத்துக்களே அவரை நிருபிக்கின்றன. இம்சையின் இம்சையை வர்ர, மே மாசத்துலருந்து தாங்கிக்க ஒருத்தர் மாட்டிக்கிட்டாருங்கோ:P. ஆமாம் நிச்சயதார்த்தம் இனிதே நடந்தேறிவிட்டது.
மாப்பிள்ளை,மணப்பெண்ணின் இம்சைகளுக்கு சரண்டராகிவிட்டதா மேலதிக தகவல் வந்துள்ளது.தினமும் எழுந்ததும் மணப்பெண்ணின் பிளாகில் ரெண்டு பதிவுகளை படிச்சுட்டுதான் பல்விளக்கவே போறாராம்ல்ல...(காரணம்-மாப்பிள்ளை தன்னோட பதிவெல்லாம் படிச்சுட்டாரான்னு டெஸ்ட் பண்ண,பதிவுலருந்து கேள்விகள் கேட்கப்படும்ன்னு மணப்பெண் போட்ட கட்டளை தானாம்).

திருமண நாளை எதிர்நோக்கி தினமும் ஆபிஸ்ல கனவுல டூயட் பாடிக்கிட்டிருக்கற தோழி இம்சை அரசி என்கிற நம்ம ஜெயந்திக்கு நம்ம எல்லாருடைய சார்புலயும் வாழ்த்துக்களை சொல்லிக்குவோம்.:)










கவிஞர் எழில்பாரதி,இயல்பா அன்றாடம் நிகழும் நிகழ்ச்சிகளை,ரசனையா பதித்துக்கொண்டிருக்கும் இவர் ஒரு கதாசிரியரும் கூட,அன்றாடம் வாழ்வில் நாம் காணும் சராசரி விஷயங்கள் இவரது கதைகளின் கருவாகும்போது ,அதன் பார்வையே தனியாகிவிடுகிறது.அவ்வப்போது இவரிடம் வலைத்தோட்டத்தில் கவிதைப் பூக்களும் பூக்கின்றன.பாருங்களேன் இவரது கவிதைகள் எவ்வளவு அருமையா இருக்குன்னு.
குறும்புகள் + வெட்கங்கள் =காதல்

1 comment: