Friday, August 20, 2010

சரத்குமார்


சரத்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இரா. சரத்குமார்
Sarath-Kumar.jpg
இயற் பெயர் சரத்குமார் இராமநாதன்
பிறப்பு ஜூலை 14 1954 (அகவை 56)
புது தில்லி, தில்லி, இந்தியா
தொழில் திரைப்பட நடிகர், அரசியல்வாதி
நடிப்புக் காலம் 1988—நடப்பு
துணைவர் ராதிகா சரத்குமார்
(2001-நடப்பு)

சரத்குமார்,(பிறப்பு சூலை 14, 1954) தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார். தற்போதைய தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர்.தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார். அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார்.

கோடீஸ்வரன் என்ற தொலைக்காட்சிப் பொது அறிவுப் போட்டியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

பொருளடக்கம்

[மறை]

வாழ்க்கை வரலாறு

தனிப்பட்ட வாழ்க்கை

எம். இராமநாதன் மற்றும் புசுபலீலா தம்பதியினருக்கு மகனாக புதுதில்லியில் சூலை 14,1954 அன்று பிறந்தார்.இவரது சகோதரி மல்லிகா குமார். இவர் காரைக்குடியை அடுத்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தலக்காவூரைச் சேர்ந்தவர்.

கணிதத்தில் இளங்கலை பட்டப்படிப்பை சென்னை புதுக்கல்லூரியில் படித்தார். இக்காலத்தில் சென்னை ஆணழகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மணவாழ்க்கை

இவரது முதல் மனைவி சாயா சரத்குமார்.அவர் மூலமாக சரத்திற்கு வரலட்சுமி, பூஜா என இரு மகள்கள்.2001ஆம் ஆண்டில் திரைப்பட நடிகை ராதிகாவை மணம் புரிந்தார்.இருவருக்கும் இராகுல் என்ற மகன் 2004இல் பிறந்துள்ளான்.தவிர ராதிகாவின் முதல் மகள் ரேயானிற்கும் வளர்ப்பு தந்தையாக உள்ளார்.[1]

திரை வாழ்க்கை

சரத்குமார் ஆங்கிலம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடமொழிகளில் நடித்துள்ளார்.

இவர் நடித்த சில திரைப்படங்கள்:

அரசியல் வாழ்க்கை

1996ஆம் ஆண்டு தி.மு.கவில் சேர்ந்தார்.அக்கட்சியின் வேட்பாளராக 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2002ல் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 2006ஆம் ஆண்டு அக்கட்சி தலைவர்களுடன் பிணக்கு கொண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியேறினார். அதிமுகவில் மனைவி ராதிகாவுடன் இணைந்து அக்கட்சிக்காக தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவரது மனைவி ராதிகா அதிமுகவிலிருந்து கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக அக்டோபர் 2006ல் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடந்து சரத்தும் நவம்பர் 2006இல் திரைப்பட வேலைகளை காரணமாக்கி வெளியேறினார்.


31 ஆகத்து 2007 அன்று, சரத்குமார் புதிய கட்சியை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி துவக்கினார். காமராசர் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் நிலைநிறுத்துவது இக்கட்சியின் நோக்கமாகும்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

No comments:

Post a Comment