Sunday, July 18, 2010

கிரிக்கெட்

துடுப்பாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

(கிரிக்கெட் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிரிக்கெட்/மட்டைப்பந்தாட்டம்

கிரிக்கெட் - (துடுப்பாட்டம், மட்டைப்பந்து, Cricket) 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டு. இது முறையே 11 வீரர்கள் கொண்ட இரு அணிகளுக்கிடையே ஆடப்படும் ஆட்டமாகும். தற்பொழுது, இந்த ஆட்டம் காமன்வெல்த் நாடுகளில் பரவலாக ஆடப்பட்டு வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் மிகப் பிரபலமான விளையாட்டு இது.

பொருளடக்கம்


ஆட்டம் பற்றிய விளக்கம்

குச்சம் (ஸ்டம்புகள்)

ஆடுகளம்

நீள் வட்டம் அல்லது வட்ட வடிவில் அமைந்த கிரிக்கெட் மைதானத்தின் நடுவில் சுமார் 20 மீட்டர் * 3 மீட்டர் நீள அகலத்தில் பிட்ச் எனப்படும் பகுதி அமைக்கப்பட்டிருக்கும். இப்பகுதியின் நிலம் பதப்படுத்தப் பட்டும், புற்கள் வெட்டப்பட்டும் இருக்கும். இந்த பிட்சின் இரு முனைகளில் தலா மூன்று ஸ்டம்புகள் எனப்படும் தண்டுகள் நடப்பட்டிருக்கும்.

ஆட்டம்

முதலில் மட்டை பிடிக்கும் அணியினருள் இருவர் பிட்சின் இரு முனைகளிலும் நின்று கொள்வர். பந்து வீசும் அணியினர் பந்தினை தண்டுகள் மீது அடித்து வீழ்த்த முயற்சி செய்வர். தண்டுகளின் முன் நிற்கும் மட்டை பிடிப்பவர் பந்து தண்டின் மேல் படாமல் காக்க வேண்டும். அத்துடன் பந்தை மட்டையால் மைதானத்தில் அடித்துவிட்டு பிட்சின் ஓரு முனையிலிருந்து மறு முனைக்கு ஓடலாம். இவ்வாறு எத்தனை முறை மட்டை வீசும் அணியினர் ஓடுகிறார்களோ அத்தனை ஓட்டங்கள் எனப்படும் புள்ளிகள் வழங்கப்படும். மேலும், அடிக்கப்படும் பந்து மைதான எல்லையைத் தாண்டிவிட்டால் மட்டை பிடிக்கும் அணியினருக்கு கூடுதல் ஓட்டங்கள் வழங்கப்படும். பந்து தண்டு மீது பட்டுவிட்டாலோ அடிக்கப்படும் பந்து தரையில் படாமல் நேராக பந்து வீசும் அணியினருள் ஒருவரின் கைகளில் அகப்பட்டுக்கொண்டாலோ மட்டை பிடிப்பவர் விலகிக்கொள்ள வேண்டும். மட்டை வீசும் அணியின் அடுத்த ஆட்டக்காரர் வந்து ஆட்டத்தைத் தொடர்வார். இவ்வாறு மட்டை பிடிக்கும் அணியின் பத்து ஆட்டக்காரர்களை பந்து வீசுபவர் வீழ்த்த வேண்டும். மட்டையாளரை வீழ்த்துவதற்கு முற்கூறியன தவிர மேலும் சில வழிகள் உள்ளன.

ஆட்டத்தின் முதல் பகுதியில் பந்து வீசிய அணி இரண்டாம் பகுதியில் மட்டை பிடிக்கும். ஆட்ட இறுதியில் அதிக ஓட்டங்கள் குrajthilakவித்த அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும்.

ஆட்ட வகைகள்

டெஸ்ட் போட்டிகள்

இவ்வகை போட்டிகளே துடுப்பாட்டத்தின் பாரம்பரிய ஆட்டமாகும். ஒரு டெஸ்ட் போட்டி ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து நடக்கும். ஒவ்வொரு அணியும் இரு இன்னிங்ஸ் விளையாட வேண்டும். இரு இன்னிங்ஸிலும் அதிக ஓட்டங்கள் எடுத்த அணி வென்றதாக கருதப்படும்.

ஒரு நாள் போட்டிகள்

இவ்வகை போட்டிகள் 1970களில் அறிமுகப் படுத்தப்பட்டது. இவ்வகைப் போட்டியில் இரு அணிகளும் ஐம்பது ஓவர்களுக்கு மிகாமல் ஒரு இன்னிங்ஸ் ஆட வேண்டும். அதிக ரன் எடுத்த அணி வெற்றி பெறும். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்த ஆட்ட வகையே கடைபிடிக்கப் படுகிறது.

துடுப்பாட்டம் விளையாடும் நாடுகள்

உலகில் மட்டைப்பந்தின் பரவல். ஆரஞ்சு நிறத்தில் உள்ள நாடுகள் ஐந்து நாள் போட்டி விளையாட தகுதி பெற்றவை. பச்சை நிறத்தில் உள்ளவை ஐந்து நாள் போட்டி விளையாடாத மற்ற முக்கிய ஐ.சி.சி உறுப்பு நாடுகள். ஊதா நிறத்தில் உள்ளவை மற்ற ஐ.சி.சி உறுப்பு நாடுகள்

ஐந்து நாள் போட்டிகள் விளையாடத் தகுதி பெற்ற நாடுகள் பின்வருவன

உலகக் கோப்பை வென்ற அணிகள்

  • மேற்கிந்திய தீவுகள் (1975, 1979)
  • இந்தியா (1983)
  • ஆஸ்திரேலியா (1987, 1999, 2003,2007)
  • பாகிஸ்தான் (1992)
  • இலங்கை (1996)

துடுப்பாட்டத்தின் சமூக தாக்கங்கள்

துடுப்பாட்டம் ஐக்கிய இராச்சிய மேல்வர்க்கத்தில் தோன்றிய ஒரு பொழுது போக்கு விளையாட்டு. இவ்விளையாட்டை அங்கு "gentlemen's game" (en:Gentleman) என்று அழைப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. துடுப்பாட்டம் இந்தியா இலங்கை ஐக்கிய இராச்சியத்தின் காலனிகளாக இருந்த போது அங்கே பரவியது. துடுப்பாட்டம் பிரபலமான பின்பு பல மரபு வழி விளையாட்டுக்கள் மறைந்து போக வழிக்கோலியது. இந்த மாற்றத்தை வலைப்பதிவர் சுந்தரவடிவேல் பின்வருமாறு விபரிக்கின்றார்.[1]

விளையாட்டு. எது விளையாட்டு? பளிங்குக் குண்டுகளை உருட்டி, கிட்டியை அடித்து, நொண்டியடித்தோடி, கண்ணாமூச்சி ஆடி, கால்பந்தாடி, ஓட்டப்பந்தயம் வைத்து…இப்படித்தான் நான் விளையாடினேன். அது என் குழந்தைப் பருவம். டேய் கிட்டிப்புள்ளுதான் கிரிக்கெட்டுன்னு விளயாடுறானுக அப்படின்னு எட்டாங்கிளாஸ்ல மூனு குச்சிய வச்சு ஆடுற வரைக்கும் இவைகள்தாம் எம் விளையாட்டு. இப்படித்தான் என்னோடு சேர்ந்த எல்லாப் பயல்களும் பொண்ணுகளும் ஆடினார்கள். இதுல பால் வித்தியாசமில்ல. இதுகள்ல சந்தோசம் இருந்துச்சு. கிரிக்கெட் நெய்வேலிக் காட்டாமனிச் செடியும், கருவேலமுள்ளும் மாதிரி எங்க ஊர்லயும் பரவ, கிரிக்கெட் பயித்தியம் எங்களுக்கும் புடிச்சிருச்சு.

No comments:

Post a Comment