எந்த ஒருசெயலுக்கும் எதிர்வினை உண்டு.நல்ல செயல்களுக்கு நல்ல பலன்களும்,தீய செயல்களுக்கு தீய பலன்களும் நமக்கு கிடைக்கும்.தாழ்வு மனப்பான்மை எப்படி ஒரு நோயோ அதேபோல் ஆணவமும் ஒரு நோயாகும்.சமுதாய அங்கிகரிப்பில்லாமலும்,முயற்சிகள் தோல்வியுற்ற மனிதனுக்கு யதார்த்தமாகவே தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டுவிடுகிறது.
அதை பற்றி கவலைபடாமல் நல்ல எண்ணத்து
... டனும்,தளராத மனதுடன் வாழ்வில் போராடினால் வெற்றி நிச்சயம்.தாழ்ந்த நிலையிலிருக்கும் மனிதர் தான் உயர்ந்த நிலைக்கு போகவேண்டும் என்ற குறிக்கோள் இருந்தால் போதுமானது.ஆனால் உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதர் தாழ்ந்த நிலைக்கு போகாமல் இருக்கவேண்டும் என்றால் பணிவு கண்டிப்பாக வேண்டும்.ஏனென்றால் எவ்வளவு உயரத்தில் இருக்கும் மனிதனையும் வீழ்த்தும் சக்தி ஆணவத்திற்கு உண்டு.
மனிதன் சாதாரணநிலையில் இருக்கும்பொழுது,சமுதாயம் அவனது திறமைக்கு குறைவாகவே மதிப்பிடும்.உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதனுக்கு கிடைக்கும் புகழ்ச்சிகளும்,அங்கிகாரமும் அவனுக்கு தலைகணத்தை கொடுத்துவிடகூடாது.எப்பொழுதும் சமுதாயம் மனிதனுக்கு கொடுக்கும் மதிப்பு அவனை வைத்து அல்ல,இருக்கும் நிலையை வைத்தே அமையும்.
நம் திறமையும்,அறிவும்,தன்னம்பிக்கையையும் மற்றவர்கள் மதிப்பிடவேண்டிய அவசியம் இல்லை.நம்மை நாமே அறிந்து கொண்டால் போதும்.நாம் தாழ்ந்த நிலையில் இருக்கும்பொழுது இகழ்ந்தாலும்,உயர்ந்த நிலையில் இருக்கும்பொழுது புகழ்ந்தாலும் மனதை சலனமில்லாமல் வைத்துகொண்டால் எவராலும் நம்மை வீழ்த்தமுடியாது.
- பட்டுக்கோட்டை சுப்பிரமணியன்.



![@[496074147115958:274:தமிழால் இணைவோம்]](http://sphotos-a.ak.fbcdn.net/hphotos-ak-snc6/s480x480/182868_528911743832198_580258703_n.jpg)
No comments:
Post a Comment