Thursday, May 16, 2013

நான் தொலைத்த என் அப்பா.. (கவிதை சாரல்கள்)

நான் தொலைத்த என் அப்பா..


எந்த அறைக்குச் சென்றாலும்

உன் நிழல் இருக்கிறது..

... எனக்கு நிழல் வேண்டாம்

நிஜ்மாக நீ வேண்டும்



நீ நட்டுவைத்த

மல்லிகையும் பிச்சியும்

உன் நிழலை அலங்கரிக்கின்றது.



செல்லமாய்

நீ அழைக்கும் "அம்மு"

என்ற குரல் என் காதுகளில்

ஒலித்துக்கொண்டே இருக்கிறது.



கிரீச் என்ற சத்தத்துடன்

நீயும் நானும் சேர்ந்தாடிய

ஊஞ்சலிலோ இன்று நீயில்லாமல்..

உன் நினைவுகள் சுமந்த

நான் மட்டும் தனிமையில்..



முற்றத்தில் நீ அமர்ந்த

சாய்வு நாற்காலி

இன்று கவனிப்பாரற்று

பின் வீட்டில்..



உன் மடி மீது

தலை சாய்த்து

கதை பேசிய நான்

தலையணைகளிடம் கதை சொல்கிறேன்

கண்ணீராய்.



விடுமுறை என்று

நான் வந்தால் மனம்

விடுதலை பெற்று

உன்னிடம் வரத் துடிக்கிறதே.



எனக்கு பின்

உன் வீட்டில்

இன்னொரு மீரா..

பார்க்க நீ இல்லை...



எத்தனை பேர் இருந்தாலும்

நீ இல்லாத நம் வீடு

மூலவர் இல்லாத

கர்பக்கிரகமாகவே இருக்கிறது



என்ன தான் பேசினாலும்

சிரித்தாலும் மனம் மட்டும்

வெறுமையாகவே இருக்கிறது



இனி ஒரு பிறவி

என்றொன்று இருந்தால்

உனக்கே நான் மகளாக

பிறந்திட வேண்டும் அப்பா.



 கவிதை சாரல்கள்



நான் தொலைத்த என் அப்பா..
..........................................

எந்த அறைக்குச் சென்றாலும்
உன் நிழல் இருக்கிறது..
எனக்கு நிழல் வேண்டாம்
நிஜ்மாக நீ வேண்டும்

நீ நட்டுவைத்த
மல்லிகையும் பிச்சியும்
உன் நிழலை அலங்கரிக்கின்றது.

செல்லமாய்
நீ அழைக்கும் "அம்மு"
என்ற குரல் என் காதுகளில்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

கிரீச் என்ற சத்தத்துடன்
நீயும் நானும் சேர்ந்தாடிய
ஊஞ்சலிலோ இன்று நீயில்லாமல்..
உன் நினைவுகள் சுமந்த
நான் மட்டும் தனிமையில்..

முற்றத்தில் நீ அமர்ந்த
சாய்வு நாற்காலி
இன்று கவனிப்பாரற்று
பின் வீட்டில்..

உன் மடி மீது 
தலை சாய்த்து 
கதை பேசிய நான்
தலையணைகளிடம் கதை சொல்கிறேன்
கண்ணீராய்.

விடுமுறை என்று
நான் வந்தால் மனம்
விடுதலை பெற்று 
உன்னிடம் வரத் துடிக்கிறதே.

எனக்கு பின்
உன் வீட்டில்
இன்னொரு மீரா..
பார்க்க நீ இல்லை...

எத்தனை பேர் இருந்தாலும்
நீ இல்லாத நம் வீடு
மூலவர் இல்லாத
கர்பக்கிரகமாகவே இருக்கிறது

என்ன தான் பேசினாலும்
சிரித்தாலும் மனம் மட்டும்
வெறுமையாகவே இருக்கிறது

இனி ஒரு பிறவி
என்றொன்று இருந்தால்
உனக்கே நான் மகளாக
பிறந்திட வேண்டும் அப்பா. 

via கவிதை சாரல்கள்

To enjoy Relaxplzz in English step in and like this page
https://www.facebook.com/Relaxplzz1

No comments:

Post a Comment